சாலையோரச் சங்கதிகள்-1
செல்லமாலை உங்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை.
முப்பத்துஐந்து வயதான மகளிர் டிரக் டிரைவர். சேலத்தை சேர்த்தவர். எப்படி தெரியும் இவரை எனக்கு? சரியான கேள்வி.
உலக மகளிர் தினத்தன்று நண்பர் *கோரக்ஹ்ஜி* மஹாராஷ்டிராவில் உள்ள அஹமட் நகரிலுரிந்து ஒரு போட்டோவை அனுப்பியிருந்தார். அந்த போட்டோவில்தான் முதலில் செல்லமாலை நான் சந்தித்தேன்.
"ரமேஷிஜி, இவங்களை நாங்கள் சந்தித்து மரியாதை செய்தொம்," என்றார் அவர்.
ஒரு மகளிர் டிரைவர்! இத்தனை வரவேற்ப்பா? அதுவும் இந்தக் காலத்தில்?
மனம் சந்தோஷித்தது.
அது சரி, கோரக்ஹ்ஜி யார்?
டிரைவர் சேவா டிரஸ்ட் என்று ஒரு சமூக சேவை நிறுவனம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் டிரைவர் அதன் உறுப்பினர். இவர் அந்த நிறுவனத்தின் மகாராஷ்டிரா ராஜ்யத்தின் முக்கிய சேவகர்.
என்னுடைய நண்பர். ஏதாவது டிரக் டிரைவர் இந்தியாவின் எந்த மூலையிலாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால், நான் இவர்களுடைய உதவிவை நாடுவேன். அப்படிப்பட்ட சிநேகிதம்.
அந்த அம்மாளுக்கு ஹிந்தி தெரியுமா?
"இல்லை சார். ஆங்கிலத்தில் பேசினார்," என்றார் கோரக்ஹ்ஜி.
சரி.
செல்லம்மாளுடைய போன் நம்பரை கேட்டு வாங்கிகொண்டேன்.
*(தொடரும்)*
Comments
Post a Comment