சாலையோரச் சங்கதிகள்-3
இந்த "டிரைவர் பற்றாக்குறை" உலக அளவில் விவாதிக்கப்படும் டாபிக்.
அமெரிக்காவிலேக்கூட இதே சத்தம்தான். அமெரிக்கன் டிரக்கிங் அஸோஸியேஷன்ஸ் (ATA) சொல்ராங்க டிரைவர் பற்றாக்குறை: 5௦,௦௦௦. அடுத்த பத்து வருஷத்திலே இந்த எண்ணிக்கை 1௦௦,௦௦௦ ஆயிடும் அப்படீண்ணு.
ஒரே குய்யோ முறையோ கூப்பாடுதான் போங்க!
இப்படி மார் அடிச்சிக்கிறவங்க எல்லாம் ரொம்ப பெரிய கம்பெனிங்க. ஆயிரக்கணக்கான வண்டிச் சொந்தக்காரங்க.
இன்னிக்கு நேத்திக்கு இல்லை. தினம் இதே கூச்சல்தான்.
அது சரி. இப்ப புதுசா என்ன நடந்திட்டது?
ஹான், அப்படி கேளுங்க.
சமீபத்திலே அமெரிக்கா அரசாங்கத்தோட ஊடகத்தலே* ஒரு கட்டுரை வெளியாச்சு. இந்த மாறி கணிப்பெல்லாம் ஒரு மாயை. சுருக்கமா சொல்லப்போனா ஒரு புருடா! ஒரு பொய்.
நெத்தி அடி இல்லிங்களா?
ஏன் இப்படி மிகமைப்படுத்தி பேசறாங்க? சரியான கேள்விதான்.
இந்த கட்டுரை பேராசியர் ஸ்டீபன் பர்க்ஸ் எழுதுகிறார்:
பெரிய வண்டிச் சொந்தக்காரர்கள் 18 வயசான டிரைவர் கூட மாநிலம் விட்டு மாநிலம் டிரக் ஓட்ட அனுமதி வேணுமுன்னு சொல்லி அரசாங்கத்தை நிர்பந்திக்கிறார்கள். 18 வயசு டிரைவர் மாநிலத்துக்குள்ளே மட்டும்தான் ஓட்ட முடியும் இப்ப இருக்கிற சட்டப்படி.
21 வயசுக்கு மேல உள்ள டிரைவர்ததான் அமெரிக்கா முழுசும் ஓட்ட அனுமதி. நேஷனல் பர்மிட் .21 வயசுக்கார டிரைவர் யாரும் தங்க மாட்டேங்கிறாங்க. வேலையை விட்டுட்டு ஓடிப்போயிரனங்கு.
காரணம்: சட்டம் ரொம்பக் கடுமை. நம்ப ஊர் மாறி இல்லை. டிரைவர் ஏகப்பட்ட தகவல்களை கொம்ப்யூட்டர்லே பதிவு செய்யணும். தினம் தினம். அமெரிக்காவிலே ஓடற டிரக்குகளை உள்ளே நுழைஞ்சுப் பார்த்தா ஏதோ மினி கம்ப்யூட்டர் லேப் மாதிரி இருக்கும்.
ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ஜோடி சேர்ந்து ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்திருக்கிறார்கள்: அதே 18 வயசு குறைப்பு விஷயம்தான். இந்த மசோதா வெற்றியான நிறைய இளம் டிரைவர் கிடைப்பாங்க. அதுவும் ரொம்ப கொறஞ்ச சம்பளத்தில்.
ஏன் டிரைவர் பற்றாக்குறை? சரியான சம்பளம் கொடுத்தா யாரும் வேலையை விட மாட்டாங்க, என்கிறார் பர்க்ஸ். செம்ம போடு! அது போறதுன்னு பேராசியர் மேலும் அறுதி இட்டுக்கூறுகிறார்: டிரைவர் சமூகத்துக்கு சரியாய் வசதிகளை செய்ய வேண்டும் என்று. இன்னோர் சிக்ஸர்! நம்ப ஊரு கதையேதான்.
பர்க்ஸ் ஒத்துக்கொள்கிறார் டிரைவர் பற்றாக்குறை இருக்கிறது என்று. கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. வண்டிச் சொந்தக்காரர்கலே, நீங்கள் ஒரு நல்ல மனா மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எல்லா பிரபலமும் காற்று அடித்த பஞ்சாக பறந்து விடும்.
கேட்டா சரி. ... இல்லைனா?
அனுபவி ராஜா, அனுபவி!
.
Notes:
* U.S. Bureau of Labor Statistics (BLS)
Comments
Post a Comment