சாலையோரச் சங்கதிகள்-4



ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 

"நீங்க ஸில்வனை மீட் பண்ணுங்க. ஹி வில் பி தி பெஸ்ட் பேர்சன் இந்த மாதிரி ஆக்டிவிட்டீஸ்க்கெல்லாம்," சொன்னார் பெரோஸ்ஷா சர்க்காரி.

யார் பிரோஸ்ஷா? யாரு ஸில்வன்? எந்த மாறி ஆக்டிடிவிட்டீஸ்?

குழம்ப வேண்டாம்.

முதலில் பேசப்பட்டவர் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் கம்பனியுடைய CEO. செல்லமா இவரை எல்லாரும் பில்லுன்னு (Phil) கூப்பிடுவாங்க. ஸில்வன் இவர்கூட வேலை செய்பவர். டில்லியிலிருந்து. எனவே சந்திப்பது ஒன்னும் கஷ்டமில்லை.

விஷயம் என்ன? நான் டிரக் டிரைவர் வாழ்க்கையை எழுத்து வடிவில் படம் பிடித்து காட்டும் ஒரு நபர். சர்க்காரி, ஸில்வன் இவர்கள் இருவரும் டிரான்ஸ்போர்ட் பிசினஸோட சம்பந்தப்பட்டவர்கள். தட்'ஸ் தி கனெக்ஷன்.

டில்லி திரும்பி வந்தபிறகு, ஸில்வனை சந்திக்கப் போனால் அங்கே ஒரு அதிர்ச்சி.

அவர் ஸில்வன் இல்லை. பின்னே?


செல்வன். சொல்லப்போனா,  செல்வன் தசராஜ். (பத்துத்தலை  பணக்காரன் !)

ஆமாம் தமிழ்தான். ஆனாலும் கூட ஒரு சிக்கல். என்ன?

அவருக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியாது. ஒகே. அவரோட முழு பெயர்  என்ன தெரியுமா? ஹோல்டு ஆன். செந்தமிழ் செல்வன் தசராஜ்! 

பிறந்து வளர்ந்தது  எல்லாம் ஹைதெராபாத்.தெலுகு எழுதப்படிக்க பேச தெரிந்த தமிழர். அம்மா: மணிமேகலை. அன்னா: மாறன். தங்கைகள்: நிலா and ஆனந்தி. அம்மா தமிழில் கதைக்கட்டுரை எழுதுபவர்! சுத்த தமிழ் பரம்பரை. ஆனாலும், இவர்  ...  சரி அதை விடுங்க.

சுமார் ஒன்று அரை மணி நேரம் பேசி இருப்போம். பெரோஸும் செல்வனும் ஒன்றாக ஒரு சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் கம்பனியிலே (UPS) வேலை பார்த்தவர்கள். இப்போது இருவரும் இந்த கம்பெனியில். அவர் மும்பையில். இவர் டில்லியில். பழைய கம்பெனியில் நிறையச் சமூகச் சேவை பண்ணி இருக்காங்க. தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு என்று கேள்வி.

இருந்தாலும் மனசிலே ஒரு சின்ன தயக்கம். நான் தரைலேயும் படுப்பேன். ரோடு ஓர  பொட்டிக்கடியிலேயும் சாப்பிடுவேன். காற்று வசதியே இல்லாத டிரக் லேயும் ட்ராவல் பண்ணுவேன். ஏன்னா டிரக் டிரைவர்  பத்தி  தெரிஞ்சுக்கனும்னா  நாமும் அவங்க மாறியே வாழனும். நம்ப படிச்ச பந்தா எல்லாம் அங்கே செல்லாது.

செல்வன்? நிறைய படிச்சவர். பெரிய பதவியில் இருப்பவர். கார்லே போவார். கார்லே வருவார். சாப்பாடு பத்தி சொல்லவே வேண்டாம். நமக்கும் அவருக்கும் ஒத்துப்போகுமா?

மும்பையிலேயே பெரோஸ்கிட்டே கேட்டே விட்டேன்.

அவருடைய பதில்: ஒரு புன்முறுவல். சற்றுப் பொறுத்து சொன்னார்: "மீட் பண்ணுங்க. நீங்களே புரிஞ்சுப்பேங்க."

இதோ இப்ப இங்க செல்வன் முன்னாலேதான் உக்காந்து இருக்கேன். அவர் கதை கதையாகச் சொல்றார். எப்படி UPSலே டிரக் டிரைவர் கூட போய் பார்சல் டெலிவேரி பண்ணி இருக்கார்னு. சிங்கப்பூர்லேயும் டில்லிலேயும். சர்வதேச கம்பெனியே வேலைக்கு சேர்ந்தா எந்த பதவியாக இருந்தாலும் எல்லா வேலையும் கத்துக்கணும். அப்பதான் பிசினஸ் என்ன எப்படி டெவெலப் பண்ணனும்னு தெரியும். அது ஒரு கலாசாரம்.

கொஞ்சம் கொஞ்சமாக என்  மன இறுக்கம் தளருகிறது. சமுதாயத்திலே கடை மட்டமாகக் கருதப்படும் குடும்பங்களோடு அவர்கள் முன்னேற்றத்துக்கு அவர் செஞ்ச வேலை கேட்டு ஏன் மனம் சிறகடித்துப் பறக்கிறது. டிரைவர் நிலையும் நம்ம நாட்டுலே அதேதான். சமூகத்திலே ஒரு அந்தஸ்து இல்லை.

இது நடந்தது மார்ச் 2013. எஸ், ஆறு வருஷம் முன்னாடி.

ஆறு மாசம் கழிச்சு, பெரோஸ் கேக்கிறார்: "உங்க அனுபவம் எப்படி?"

அசடு வழிய, நான் சொல்கிறேன்: "ரம்மும் கோகோ கோலாவும் போல இருக்கோம் !"

அந்த ஆறு மாதங்களில் என்ன நடந்தது? நிறையவே அரங்கேறியது.

தொடரும் 




Comments

Popular Posts